இந்தியா சினிமா

74 வயது நடிகை செய்யும் காரியமா இது?.. 3 இலட்சத்திற்கு மொட்டை போட்ட ஆசாமிகள்.!

Summary:

74 வயது நடிகை செய்யும் காரியமா இது?.. 3 இலட்சத்திற்கு மொட்டை போட்ட ஆசாமிகள்.!

இன்டெர்னட்டில் மதுபானம் ஆர்டர் செய்த நடிகையிடம் ரூ.3 இலட்சம் ஏமாற்றப்பட்டுள்ளது. 

இணையவழியில் விற்பனை செய்யப்படும் பொருட்களை நம்ப இயலாத காலம் தற்போதுள்ள நிலையில், மதுபானம் இணையவழியில் விற்பனை செய்யப்படவில்லை. பலரும் இன்டர்நெட் வாயிலாக மதுபானம் ஆர்டர் செய்ய முயற்சித்து பணத்தை இழந்து வருகின்றனர். 

இந்நிலையில், மும்பையில் உள்ள தாதர் பகுதியை சார்ந்த 74 வயது இந்தி நடிகை, இணையவழியில் உறவினருக்கு விஸ்கி வகை மதுபானம் வாங்கி கொடுக்க முயற்சித்து, ரூ.3 இலட்சத்தை இழந்துள்ளார். 

மதுபானத்தை இன்டெர்னட்டில் வாங்க முடிவு செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியே வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். அவருக்கு தொடர்பு கொண்ட நபரும் வங்கிக்கணக்கு விபரம், ஓ.டி.பி போன்றவற்றையும் கொடுத்த நிலையில், ரூ.3 இலட்சம் பணம் பறிபோயுள்ளது. 

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இந்தி பட நடிகை சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மோசடி நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement