#Breaking: சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படை - மாவோயிஸ்ட் துப்பாக்கிசண்டை.. 31 பேர் என்கவுண்டர், 2 வீரர்கள் வீர மரணம்.!



in Chhattisgarh 31 Maoist Killed today 

 

மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், அவர்களை ஒடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டம், இந்திராதி தேசிய பூங்காவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: கும்பாவிஷேகத்தில் நடந்த அசம்பாவிதம்.. கிரேன் உடைந்து நேர்ந்த சோகம்.. ஒருவர் பலி.!

இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தவே, அங்கு இருதரப்பு சண்டை நடந்தது.

31 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்

இந்த தாக்குதல் சம்பவத்தில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில், 2 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தொடர்ந்து மாவோயிஸ்ட் ஒழிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

மனம் திருந்தி வருவோரை ஏற்கவும் அரசு தயாராக இருக்கும் நிலையில், ஆயுதம் ஏந்துவோரை ஆயுதத்தால் அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: ஒரு நொடி நின்று வந்திருக்கலாமே.. 5 வயது சிறுவனுக்கு இப்படியா மரணம் வரணும்? பதறவைக்கும் வீடியோ.!