கும்பாவிஷேகத்தில் நடந்த அசம்பாவிதம்.. கிரேன் உடைந்து நேர்ந்த சோகம்.. ஒருவர் பலி.!



Karnataka Haveri Temple Festival Crane Bucked Collapsed 1 Died 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம், சேஷாரி கிராமத்தில் கங்காபரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

அப்போது, குடமுழுக்கு கலசங்களை விழாக்குழுவினர் கிரேனில் எடுத்துச் சென்று கோபுரத்தில் பொறுத்த முற்பட்டனர். கிரேன் வாளியில் 3 பேர் இருந்த நிலையில், அவர்களை கிரேன் ஆபரேட்டர் உயர தூக்கினார். 

இதையும் படிங்க: காயம்பட்ட சிறுவனுக்கு பெபிக்குயிக் தடவி சிகிச்சை; செவிலியரின் அதிர்ச்சி செயல்.!

ஒருவர் பரிதாப பலி

அப்போது, எதிர்பாராத விதமாக வாளி திடீரென உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 வயதுடைய மஞ்சு பாட்டில் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மஞ்சு படிதார் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், விபத்து குறித்து ஆடுர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 5 வயது சிறுமி பலாத்காரம் முயற்சி.. சாக்லேட் வாங்கிக்கொடுப்பதாக அழைத்துச்சென்று அதிர்ச்சி.!