மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
5 வயது சிறுமி பலாத்காரம் முயற்சி.. சாக்லேட் வாங்கிக்கொடுப்பதாக அழைத்துச்சென்று அதிர்ச்சி.!

வீட்டில் உள்ள குழந்தைகளிடம் முன்பின் அறிமுகமில்லாத நபர், எந்த பொருட்கள் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினாலும், அவர்களுடன் செல்ல கூடாது. பெற்றோர் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில், கடந்த ஜன.23ம் தேதி 5 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 30 வயது மர்ம நபர், சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி இருக்கிறார்.
பலாத்கார முயற்சி
சிறுமியும் அவருடன் சென்றதாக கூறப்படும் நிலையில், அவரை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற கயவன் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். இதனால் சிறுமி அலற, அக்கம் பக்கத்தினர் கூடி இருக்கின்றனர். இதனால் பதறிப்போன நபர், அங்கிருந்து சிறுமியை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.
இதையும் படிங்க: காய்கறி வியாபரிகள் பயணித்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 9 பேர் பரிதாப பலி.!
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை முன்னெடுக்க தொடங்கினர். மேலும், மர்ம நபரை விரைந்து கைது செய்ய, அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஆதாரங்கள் கண்காணிக்கப்பட்டு, மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், குளிரில் விரைத்து உயிரிழந்த தந்தை; மருத்துவமனை வளாகத்தில் சோகம்.!