உச்சக்கட்ட கொடூரம்! ஆடையின்றி, நாய்கள் கடித்து குதறிய நிலையில்... சாலை அருகே கிடந்த பெண்ணின் சடலம்! உடல் அருகே சிக்கிய மதுப்பாட்டில்கள்... பகீர் சம்பவம்..!!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடைகளின்றி, நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தட்டி அண்ணாரம் பகுதியில் 100 அடி சாலை அருகே கிடந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி முதல் காணாமல் போன மங்கம்மா என்பது தெரியவந்துள்ளது.
நடைப்பயிற்சி சென்றவர்கள் அளித்த தகவல்
தட்டி அண்ணாரம் பகுதியில் 100 அடி சாலை அருகே இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற சிலர், சந்தேகத்திற்கிடமான நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து நாபோல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தற்கொலை இல்லை..! இது கொலை... என் தம்பி முகம் முழுக்க காயம்! தற்கொலை போல சித்தரிப்பு... கதறி அழுது நீதி கேட்கும் அண்ணன்!!!
ஆதார் அட்டையால் அடையாளம் தெரிந்தது
சடலத்தின் அருகே கிடந்த ஆதார் அட்டையை வைத்து, இறந்தவர் உஸ்மானியா பல்கலைக்கழக மாணிகேஸ்வர் நகரைச் சேர்ந்த மங்கம்மா என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கேட்டரிங் வேலைக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக ஓயு காவல் நிலையத்தில் ஏற்கனவே காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
பாலியல் அத்துமீறல் நடந்ததா? போலீசார் விசாரணை
மங்கம்மாவின் உடல் கை, கால்கள் இல்லாமல் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் அருகே மதுபாட்டில்களும் கிடைத்துள்ளன. இதனால் அவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறு பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நாபோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மங்கம்மா கடைசியாக சென்ற இடங்கள் மற்றும் அவர் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். தட்டி அண்ணாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான CCTV காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
నాగోల్ పోలీస్ స్టేషన్ పరిధిలో మహిళ మృతదేహం కలకలం
— Telugu Scribe (@TeluguScribe) October 7, 2026
కుక్కలు పీక్కుతింటూ దయనీయ స్థితిలో లభ్యమైన మృతదేహం
తట్టి అన్నారం సమీపంలో దయనీయ స్థితిలో ఉన్న మహిళ మృతదేహాన్ని గుర్తించి పోలీసులకు సమాచారం ఇచ్చిన వాకర్స్
సదరు మహిళ ఓయూ మాణికేశ్వర్ నగర్ ప్రాంతానికి చెందిన మంగమ్మగా గుర్తింపు… pic.twitter.com/lIG4F18e9d