Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அவருடன் உறவை தொடர்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... கள்ளக்காதல் ஜோடியை தீர்த்து காட்ட கணவர் போட்ட மாஸ்டர் பிளான்... கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
அவருடன் உறவை தொடர்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... கள்ளக்காதல் ஜோடியை தீர்த்து காட்ட கணவர் போட்ட மாஸ்டர் பிளான்... கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

ஹைதராபாத் அப்துல்லாபூர்மீத் வரிசிகூடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ் - ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த யட்லா யஸ்வந்த் என்பவர் ஜோதிக்கு அறிமுகமாகியுள்ளார்.
அவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஸ்ரீனிவாச ராவ்வுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் மனைவி பிடிவாதமாக இருந்துள்ளார்.
அதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ஸ்ரீனிவாச ராவ், கள்ளக்காதல் ஜோடியை தீர்த்து கட்டிவிடலாம் என்று முடிவு செய்தார். அதற்காக ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதன்படி தனது மனைவியிடம் அன்பாக இருப்பது போல் நடித்தது மட்டுமின்றி யஸ்வந்த் ரொம்ப நல்லவர். என்னைவிட அன்பானவர் அவர்தான் உனக்கு பொருத்தமானவர் அவருடன் உறவை தொடர்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஸ்ரீனிவாச ராவ் கூறியது அனைத்தும் உண்மை என நம்பியுள்ளார் ஜோதி. அதனையடுத்து காதல் ஜோடி இருவரையும் அழைத்து கொண்டு தனிமையான ஒரு இடத்திற்கு சென்ற ஸ்ரீனிவாச ராவ் அங்கு மனைவி மற்றும் யஸ்வந்த் இருவரையும் தனிமையில் இருக்க வைத்துள்ளார்.
பின்னர் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் யஸ்வந்த் மீது ஸ்ரீனிவாச ராவ் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மனைவி ஜோதியையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இரண்டு உடல்களும் அழுகிய நிலையில் 2 நாட்களாக அங்கேயே கிடந்தது. செவ்வாய்க் கிழமை தான் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்கள் யார் என்று விசாரித்தபோது, ஸ்ரீனிவாசன் மனைவி என்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் தலைமறைவான ஸ்ரீனிவாச ராவ்வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.