விடுதி அறையில் 18 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு! சாப்பாட்டில் விஷம் வச்சு கொன்னுட்டாங்க... தந்தையின் பரபரப்பு புகார்..!!!
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி கல்பனா, ஹைதராபாத் ஷேக் பேட் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் உயிரிழந்தார். பி.டெக் முதலாண்டு படித்து வந்த அவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
விடுதி அறையில் மாணவி உயிரிழப்பு
மகபூப்நகர் மாவட்டம் கொவ்குண்ட்லா மண்டலத்தைச் சேர்ந்த ராமஞ்சநேயுலுவின் 18 வயது மகள் கல்பனா. ஹைதராபாத்தில் தங்கி கல்லூரியில் பி.டெக் முதலாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், விடுதி அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் விடுதி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விடுதி கழிப்பறையில் ஃபினாயில் குடித்து மாணவி உயிரிழப்பு! சிக்கிய தற்கொலை கடிதம்... கதறி துடிக்கும் பெற்றோர்...!!!
உணவு தொடர்பாக தந்தை பரபரப்பு புகார்
இதற்கிடையே, கல்பனா தங்கியிருந்த விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக கேள்வி எழுப்பியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விடுதி நிர்வாகத்தினர் தனது மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில்தான் அவர் உயிரிழந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை
தந்தையின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கல்பனாவின் மரணத்துக்கான காரணம், விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் அவர் உயிரிழப்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட விசாரணை முடிவுகளுக்குப் பிறகே மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.