மனைவியை கொன்று தலையை பிரிட்ஜில் வைத்த கணவர்! கவுகாத்தியில் அதிர்ச்சி சம்பவம்!
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே மனைவியைக் கொன்று தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள பசிஸ்தாபூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 25 வயதான ரியா தலுக்தார் என்ற பெண் கணவருடன் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில் கணவர் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வீட்டை சோதனையிட்டபோது, ரியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலை தனியாக துணிப்பையில் சுற்றப்பட்டு வீட்டில் இருந்த பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது சில விரல்களும் வெட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் பாய்ந்து கீழே அறுந்து விழுந்து.... பட படவென வெடிக்கும் மின் கம்பி....! நடுங்க வைக்கும் காட்சி...!!!

இதனிடையே தலைமறைவாக இருந்த ரியாவின் கணவர் ராமானுஜ் கோஸ்வாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கணவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் கூறிய காரணங்கள் மற்றும் கொலை நடந்த முழு சூழ்நிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே நடந்த இந்த கொடூர சம்பவம் கவுகாத்தி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.