வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்! கதவை திருந்தவர்களுக்கு பிரிட்ஜில் காத்திருந்த அதிர்ச்சி! திருமணமான 6 மாதத்தில் கணவர் செய்த கொடூரம்.... பகீர் சம்பவம்!!!



guwahati-woman-murder-husband-surrenders

அசாம் மாநிலம் குவஹாத்தியில் திருமணமாகி 6 மாதங்களே ஆன இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பசிஸ்தாபூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர். வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தலைமறைவாக இருந்த கணவர் ராமானுஜன் கோஸ்வாமி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார்.

வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்

பசிஸ்தாபூர் பகுதியில் ரியா தாலுக்தார் கோஸ்வாமி (25), தனது கணவர் ராமானுஜன் கோஸ்வாமியுடன் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அவர்களது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பிடூ... பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது திடீரென வந்த எமன்! தூக்கி வீசப்பட்ட கொடூரம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!!

தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், வீட்டின் கதவைத் திறந்து சோதனை நடத்தினர். அப்போது ரியாவின் உடல் துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து வீட்டில் மேற்கொண்ட சோதனையில், பிரிட்ஜுக்குள் பாலித்தீன் பையில் ரியாவின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் விரல்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

48 மணி நேரத்துக்கு முன்பு கொலை?

கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்திலிருந்து ராமானுஜன் வீட்டில் இல்லை. தலைமறைவாக இருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் 48 மணி நேரத்துக்கு முன்பே கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கான காரணம் என்ன, இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கணவர் ராமானுஜன் அளிக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? ரீல்ஸ் மோகத்தால் 30 அடி அணையில் இருந்து குதித்து இளைஞர்! இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி.... நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!!