மனைவி டீ போட மறுத்ததால் கணவன் வெறி செயல்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் மொகித், சாதனா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மனைவி சாதனா சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த அவசர நிலையில் கணவன் தனக்கு டீ போட்டு தர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்
இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியுடன் கணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த மோகித், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மோகித்தை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றன.
இது குறித்து சாதனாவின் உறவினர்கள் கூறுகையில், மோகித் அடிக்கடி சாதனைவிடம் சண்டையிட்டு கொண்டு இருப்பார் எனவும், சாதனாவை வெறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.