இந்தியா

அழகான மனைவி..! அசந்து தூங்கிய நேரத்தில் கணவன் செய்த காரியம்..! வெளியான பகீர் காரணம்.!

Summary:

Husband cut wife hair while sleeping

மனைவி தன்னை விட அழகாக இருப்பதாலும், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தாலும் கணவரே மனைவியின் தலைமுடியை வெட்டி, ரூமில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷினி. இருவருக்கும் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆன நிலையில் மனைவிக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக சந்தேகித்து ஆரிப் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளார். மேலும், மனைவி ஒருநாள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது தலை முடியையும் வெட்டியுள்ளார்.

மேலும், அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி, வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்த ரோஷினி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement