திருமணம் முடிஞ்சு 1 வருஷம் ஆச்சு..! இப்போ வந்து இப்படி சொல்றிங்க.! கணவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி.!Husband beat wife by helmet for not singing in divorce form

திருமணம் முடிந்து 1 வருடம் ஆன நிலையில், மனைவி அழகாக இல்லை என கூறி கணவன் அவரது மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயநகர் அருகே மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார் (36). இவரது மனைவி விஜயலட்சுமி (32). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வரும் சசிகுமாருக்கும் - விஜயலக்ஷ்மிக்கும் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Crime

சந்தோசமாக சென்றுகொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நீ அழகாக இல்லை, உன்னுடன் வாழ பிடிக்கவில்லை, எனக்கு விவாகரத்து வேண்டும் என சசிகுமார் மனைவியிடம் கேட்டு அடிக்கடி சண்டைபோடுவந்துள்ளார். திருமணம் முடிந்து இத்தனை ஆட்கள் ஆகிவிட்டது, இப்போ வந்து நான் அழகா இல்லைனு சொல்ட்ரிங்க? விவாகரத்து தர முடியாது என மனைவி கூறியுள்ளார்.

சன்டை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஆசிட் வீசி விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் சசிக்குமார் மனைவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஹெல்மெட்டால் மனைவியின் தலையில் சசிக்குமார் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த விஜயலட்சுமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை அடுத்து, விஜலக்ஷ்மியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து தலைமறைவாக உள்ள சசிகுமாரை தேடி வருகின்றனர்.