அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மனைவிக்கு சமைக்கத் தெரியாததால் விவாகரத்து கேட்ட கணவர்... நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு சரியாக சமைக்கத் தெரியாத காரணத்தால் அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்று அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர்.
அதாவது மனைவிக்கு சமைக்க தெரியாததை எல்லாம் முக்கிய காரணமாக கூறி விவாகரத்து கேட்பது ஏற்று கொள்ளப்படாது என்று கூறிய நீதிபதிகள் அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனைவிக்கு சுவையாக சமைக்க தெரியாதது எல்லாம் கணவரை கொடுமைபடுத்துவதாக ஏற்று கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அந்த மனுதாரர் மனைவி மீது பல்வேறு புகார்களை கூறியுள்ளார். அதில் மனைவி தனது உறவினர் மற்றும் முதலாளி முன்பு தன்னை அவமானம் படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு விளக்கம் அளித்த மனைவி, கணவரின் பாலியல் வக்கிரங்களை குறிப்பிட்டு அவரை இயல்பான வாழ்க்கைக்கு மாற்றவே முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்டு நீதிபதிகள் விவாகரத்து கோரும் மனுவை நிராகரித்தனர்.