65வயது தந்தையை 1கிமீ தோளிலேயே சுமந்து சென்ற மகன்! ஊரடங்கால் நேர்ந்த பரிதாபம்!

65வயது தந்தையை 1கிமீ தோளிலேயே சுமந்து சென்ற மகன்! ஊரடங்கால் நேர்ந்த பரிதாபம்!


httpswwwmaalaimalarcomnewstopnews202004160839511425724m

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் இதுவரை 12000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 400க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா  பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் யாரும் வீட்டைவிட்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர்  சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, அவரது மகன் மற்றும் மனைவி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால்,  ஊரடங்கு காரணமாக அனுமதி இல்லை என போலிசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவரது மகன் காண்பித்த ஆவணங்களையும் அவர்கள் கவனிக்கவில்லை.

இந்நிலையில் நடக்க முடியாத நிலையில் இருந்த 65 வயது நபரை, அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வீட்டிற்கு தோளில் சுமந்தபடி தூக்கி சென்றுள்ளார். அப்போது அவரது தாயார் பைகளை தூக்கியவாறு நடந்தே அவர்களது பின்னால் சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.