Honeymoon Murder: தாலி ஈரம் காய்வதற்குள் கணவனுக்கு பால் ஊற்றிய மனைவி.. முதல் காதலை மறக்க முடியாமல் கொடூரம்.!
முதல் காதலை கைவிட முடியாத காரணத்தால், திருமணமான 3 மாதத்தில் பெண் தனது கணவரை கொலை செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்கா நகர், சதுல்சாஹர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி (வயது 23). இவரது கணவர் ஆஷிஷ் (வயது 27). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆஷிஷ், அஞ்சலி, இவர்களின் உறவினர் மகன் அங்கித் ஆகியோர் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, ஆஷிஷ் மற்றும் அஞ்சலி விபத்தில் சிக்கி இருக்கின்றனர். அஞ்சலியின் நகைகளும் வழிப்பறி கொள்ளையர்களால் பறித்து செல்லப்பட்டது. விபத்து சம்பவத்தில் ஆஷிஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் மரணம்:
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆஷிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, அஞ்சலி கொள்ளை கும்பல் விபத்தை ஏற்படுத்தி தன்னிடம் இருந்த நகையை பறித்துச் சென்றதாக கூறி இருக்கிறார். இதனால் வழிப்பறி கொள்ளை கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, அஞ்சலியின் செயல்பாடுகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கொள்ளை கும்பல் என கைது செய்யப்பட்ட நபர்களில், சஞ்சு என்பவர் அஞ்சலியிடம் அடிக்கடி பேசியது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: எலும்புக்கூடாக 2 வயது குழந்தை.. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொன்று வீசிய தாய்.. மதுரையில் கோரம்.!

கொலை சம்பவம் உறுதி:
இதனால் அவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதாவது, கைது செய்யப்பட்ட சஞ்சு மற்றும் விபத்தில் காயமடைந்த அஞ்சலி ஆகியோர் காதல் உறவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இருவரும் 7 ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், அஞ்சலிக்கு ஆஷிஷுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின்னும் முன்னாள் காதலை மறக்க முடியாத பெண்மணி, தனது காதலனுடன் சேர்ந்து கணவனின் கதையை முடித்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது. சம்பவத்தன்று நடந்த விபத்து & வழிபறியும் இவர்களின் நாடகம் என்பது உறுதி செய்யப்பட்டது.

கொலை சம்பவம் அம்பலம்:
கடந்த 7 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்த ஜோடிகள், தங்களின் காதலை விட்டுக்கொடுக்க மனமின்றி கொடூர செயலை அரங்கேற்றி இருக்கிறது. திருமணத்துக்கு பின்னும் படிக்க வேண்டும் என ஸ்ரீநகர் செல்வதாக அஞ்சலி கூறினாலும், அதில் ஏற்பட்ட ஒருசில தடைகள் காரணமாக, காதலின் ஆலோசனைப்படி கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுவயதில் பெற்றோரை இழந்த ஆஷிஷ் தனது குழந்தையில்லாத அத்தை-மாமாவால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளார். அத்தையின் உறவினர் பெண்ணான அஞ்சலியை ஆஷிஷுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட சஞ்சு திருமண நிகழ்ச்சிகளில் உணவு விநியோகம் செய்யும் கேட்டரிங் வைட்டராக பணியாற்றி வந்துள்ளார். அஞ்சலி தனது பெற்றோரிடம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காத போதும், அவர்களின் வற்புறுத்தல் காரணமாக அரங்கேறிய திருமணம் கொலைக்கு வழிவகை செய்துள்ளது.
இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!