கிட்னியை மாற்றிக்கொண்ட இந்து, முஸ்லீம் தம்பதியினர்! மனதை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்

கிட்னியை மாற்றிக்கொண்ட இந்து, முஸ்லீம் தம்பதியினர்! மனதை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்



hindu-and-muslim-families-proved-humanity

பீஹாரை சேர்ந்த இந்து குடும்பத்தை சேர்ந்த தம்பதியரும், காஸ்மீரை சேர்ந்த முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த தம்பதியரும் தங்களுக்குள் சிறுநீரக தானம் செய்து அனைவரையும் மிரள வைத்துள்ளனர்.

பலதரப்பட்ட மதங்களை கொண்டது தான் இந்திய என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே. இந்த மத பிரிவினையை காரணமாக காட்டி பலர் அரசியல் செய்ய வேண்டுமென்றே மத கலவரங்களை தூண்டிவிட்டு மக்களை பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தி வருகின்றனர். நீங்கள் என்ன சூழ்ச்சி செய்தலும் நாங்கள் ஒற்றுமையாய் தான் இருப்போம் என பீகாரை சேர்ந்த இந்து தம்பதியரும், காஸ்மீரை சேர்ந்த முஸ்லீம் தம்பதியரும் நிரூபித்துள்ளனர்.

பீஹாரை சேர்ந்த மஞ்சுளா தேவி(42) என்பவரும் காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஆசிஷ்(53) என்பவரும் கடந்த சிறுநீரக(கிட்னி) கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இருவருக்குமே சிறுநீரகம் மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர். எனவே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இரண்டு குடும்பத்தினரும் சிறுநீராக தானம் செய்பவர்களை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.

hindu

கடைசியில் IKIDNEY என்ற மொபைல் ஆப்பில் இரண்டு குடும்பத்தினரும் பதிவு செய்துள்ளனர். அதன் பின்னரே அந்த இரண்டு குடும்பத்தினரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்னவெனில், தேவியின் கணவர் சுஜித் குமாரின் சிறுநீரகம், ஆசிஷிற்கு பொருத்தமாக உள்ளது என்றும், ஆசிசின் மனைவி ஷாஜியாவின் சிறுநீரகம் தேவிக்கு சரியாக பொருத்தும் எனவும் மருத்துவர்கள் சோதனையில் கண்டறிந்தனர்.

இதனை கேட்டு ஆறுதல் அடைந்த இரண்டு குடும்பத்தினரும் தங்களது சிறுநீரகத்தை மாற்றிக்கொள்ள முழுமனதுடன் சம்மதித்தனர். அதனை தொடர்ந்து அந்த தம்பதியினருக்கு மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் பிரியதர்ஷினி ராஜன் என்பவர் தலைமையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு சிறுநீரகங்கள் மாற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பிறகு நான்கு பேருமே சீராக குணமடைந்து வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

hindu

காஷ்மீரை சேர்ந்த ஷாஜியாவின் கிட்னியை தானமாக பெட்ரா பீகாரின் தேவி, "ஷாஜியாவை என் வாழ்நாளில் சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். எல்லா மதங்களையும் விட மனித நேயமே உயர்ந்தது என்பதை நான் இப்பொது நன்கு புரிந்துகொண்டேன்" என் பூரிப்புடன் கூறியுள்ளார்.

அப்துல் ஆசிஷ் இதுகுறித்து கூறுகையில், "தேவைப்படும்போது ஒரு மனிதருக்கு செய்யும் உதவியை விட மேலான காரியம் இந்த உலகில் வேறு ஒன்றுமில்லை. மனித நேயம் என்ற மதம் மட்டுமே நம்மை மனிதர்களாக மாற்றுகிறது" என தெரிவித்துள்ளார்.