மருத்துவமனையிலேயே இவ்வளவு கொடுமையா? வயதான நோயாளியை மார்பிலே தாக்கிய வார்டு பாய்! வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!!
ஹரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதிய நோயாளி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகியதுடன், சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாதுகாப்பான இடமாக கருதப்படும் மருத்துவமனையிலேயே இப்படிப்பட்ட செயல் நடந்தது கவலைக்குரியதாக மாறியுள்ளது.
சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி
தகவலின்படி, சம்பவம் நடந்த அறையில் இருந்த நபர், தனது முகம் பதிவு ஆகாத வகையில் திரையை இழுத்து மூடி வைத்துள்ளார். அதன்பின், படுக்கையில் இருந்த முதிய நோயாளியை அவர் பலமுறை தாக்கியுள்ளார். குறிப்பாக மார்பு பகுதியில் முழங்காலால் குத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. வயதானவர் என்பதையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மருத்துவர் அல்ல... வார்டு பாய்
ஆரம்பத்தில் தாக்குதல் நடத்தியவர் மருத்துவர் என கூறப்பட்டாலும், பின்னர் அவர் ஒரு வார்டு பாய் என்பதும் உறுதி செய்யப்பட்டது. வீடியோ வைரலானதும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், மேலதிக விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த CCTV வீடியோ வெளியாகியதும் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். “பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்திலேயே இவ்வளவு அநீதி நடக்குமா?” என்ற கேள்வி பல இடங்களில் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. முன்னதாக நடந்த சில மருத்துவமனை மோதல்களின் பின்னணியிலும், இப்படியான சம்பவங்கள் மீண்டும் நடப்பது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ایک نگرانی کیمرے نے وہ لمحہ ریکارڈ کیا جب بھارتی ریاست ہریانہ کے ایک اسپتال میں ایک ڈاکٹر نے کیمرے کی نظر سے بچنے کے لیے پردے بند کیے، اور پھر مبینہ طور پر ایک بزرگ مریض کے سینے پر کہنی سے تشدد کیا۔
اس واقعے کی فوٹیج سامنے آنے کے بعد شدید عوامی غم و غصہ پیدا ہوا، اور لوگوں نے… pic.twitter.com/0RwpqpO9rG
— Yamaan Shahid 𝕩 (@realYamaan) April 16, 2026
இதையும் படிங்க: இளைஞரை கட்டாயப்படுத்தி மலம் உண்ண வைத்த கொடூரம்! வாந்தி எடுத்தும் விடல...வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!