ஒரேநேரத்தில் 2 மனைவியுடன் குடித்தனம்.. அப்பா, தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக்கி பெருமிதம்.!!



Gujarat Man Is Marrying Two Women at the same time Just Like His Dad & Grandfather

இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து மூன்று பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழுவதாக ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் மேகராஜ். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காஜல்பென் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். 

இரு பெண்களுடனும் குடித்தனம் :

இதனிடையே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்ற பெண்மணியுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து, அவருடனும் குடித்தனம் நடத்தியுள்ளார். இவர்கள் மூவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில், மேகராஜ் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பெண்களையும் முறைப்படி திருமணம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: வீடியோ காலில் பாக்., பெண்ணுடன் திருமணம்.. CRPF வீரருக்கு ஷாக் பரிசு கொடுத்த அதிகாரிகள்.!

marriage

மகிழ்ச்சியாக வாழும் மனிதன் :

இது தொடர்பாக பேசிய அவர் தனது தந்தையும், தாத்தாவும் இதே போல இரண்டு பெண்களை மலர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும், அதேபோல தானும் மிக மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Video: உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு கருநாக வடிவில் வந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பரிதாப சாவு.!!