அரசின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் ஐடி நிறுவனங்கள்.. ஊழியர்கள் மகிழ்ச்சி!

அரசின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் ஐடி நிறுவனங்கள்.. ஊழியர்கள் மகிழ்ச்சி!


Government announced Good news for IT companys

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிருந்தே பணிப்புரிய அனுமதி வழங்கியது. அதன்படி மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையானது ஐடி ஊழியர்கள் அனைவரும் ஜூலை இறுதி வரை வீட்டிருந்து பணிப்புரிய அனுமதி வழங்கியிருந்தது.

IT people

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு இறுதி வரை அதாவது டிசம்பர் மாதம் இறுதி வரை அனைத்து ஐடி ஊழியர்களும் தங்களது வீட்டிருந்தே பணிப்புரிந்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.