திருமணமான பெண்ணுடன் 19 வயது ஓரினச்சேர்க்கை! பலமுறை தந்தை எதிர்த்தும் கேட்கல! திடீரென சிறுமி ரத்தத்தால் செய்த அதிர்ச்சி சம்பவம்! கதறும் தந்தை...



girl-suicide-lesbian-relationship-lucknow

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் தெலிபாக் பகுதியில் 19 வயது சிறுமி ஒருவரின் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லெஸ்பியன் உறவு காரணமா

முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடமாக அந்த சிறுமி ஒரு திருமணமான பெண் ஒருவருடன் லெஸ்பியன் உறவு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, அந்த பெண் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் வீட்டை விட்டு சென்ற பின், சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

சுவரில் இரத்தத்தில் எழுதிய குறியீடு

தற்கொலையின் முன், சிறுமி சுவரில் இரத்தத்தால் “M+S” என எழுதியிருந்தார். இது அவர்களது பெயர்களின் ஆரம்ப எழுத்துகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரும் நீண்ட நாட்களாக நெருக்கமாக பழகியதும் மற்றும் வீட்டிற்கு வெளியே தங்கி வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதுக்குன்னு இப்படியா…? மகனின் சேட்டை தாங்கமுடியாமல் தாய் செய்த கொடூர செயல்! குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்...

தந்தையின் வலியுறுத்தலும் போலீசாரின் அலட்சியம்

சிறுமியின் தந்தை, இந்த உறவை எதிர்த்து வந்தாலும், சிறுமி தொடர்ந்ததால் மனவேதனையில் வாழ்க்கையை முடித்ததாக தெரிவித்தார். மேலும், காவல்துறையிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புலம்பினார்.

போலீசார் விசாரணையில் தீவிரம்

தடயவியல் குழுவினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். தற்போது திருமணமான பெண்ணை மையமாக வைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் தெலிபாக் பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

இதையும் படிங்க: பயந்து என்னா ஓட்டம் ஓடுறாங்க.. நடுரோட்டில் வியாபாரிகளை மாடு அடிப்பது போல் காரில் இருந்தவாரே கம்பால் துரத்திய போலீஸ்காரர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!