இந்தியா

தாயை இழந்த 13 வயது சிறுமி 80 பேரால் பலாத்காரம்.. மாற்றாந்தாயாக நடித்து பதறவைக்கும் செயல்.! 74 பரபரப்பு பேர் கைது..!

Summary:

தாயை இழந்த 13 வயது சிறுமி 80 பேரால் பலாத்காரம்.. மாற்றாந்தாயாக நடித்து பதறவைக்கும் செயல்.! 74 பரபரப்பு பேர் கைது..!

பாலியல் தொழிலில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய 74 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்தபோது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் தாயார் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். அப்போது தாயாருடன் மருத்துவமனையில் சிறுமி சில நாட்கள் இருந்ததால், அவருடன் நட்பாக பழகிய மருத்துவமனை ஊழியர் சொர்ணகுமாரி, 'தான் சிறுமியை தத்தெடுத்து வளர்த்து கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

இதனை நம்பி சிறுமியின் தந்தையும், தாயில்லாமல் மகள் ஏங்கிவிடக்கூடாது என்பதற்காக சொர்ணகுமாரியிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியை அழைத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அப்போது பல ஊர்களை சேர்ந்த பல புரோக்கர்கள் மூலம் 75 பேருக்கு மேலாக சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனால் சிறுமி மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த கும்பலிடமிருந்து தப்பித்து வந்து, தனது சொந்த ஊரான குண்டூரில் உள்ள தந்தையிடம் சென்றுள்ளார். மேலும், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து அவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, குண்டூர் காவல் நிலையத்தில் இந்த விஷயம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சொர்ணகுமாரியை உடனடியாக கைது செய்தனர். அத்துடன் சிறுமியை வன்கொடுமை செய்த 80 பேரை அடையாளம் கண்டு, அதில் 74 பேரை கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள 6 பேரை பிடிப்பதற்காக காவல்துறையினர் வலை வீசியுள்ளனர்.


Advertisement