அடுத்தடுத்து 11 பெண் குழந்தைகள்! 12 வது முறை கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அற்புதம்!
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்னும் சேர்ந்தவர் கவுட்டி. தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என விருப்பப்பட்ட கவுடிக்கு முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. சரி, தனக்கு அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்த கவுடிக்கு அடுத்ததும் பெண் குழந்தை.
அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் என தனது முயற்சியை கைவிடாத கவுடிக்கு 11 பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துள்ளது. இதனால் இவரது குடும்பத்தினர் இவரை ஒதுக்க ஆரம்பித்துள்னனர்.

உனக்கு ஆண் குழந்தையே பிறக்காது என அந்த ஊர் மக்களும் கவுட்டியை பார்த்து சிரித்துள்ளனர். ஆனால், சற்றும் மனம் தளராத கவுடி 12 வது முறை கர்ப்பமானார். இந்த முறையும் பெண் குழந்தைதான் பிறகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கவுடிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் கவுட்டி, அவரது குடும்பம் உட்பட அந்த ஊரே மகிழ்ச்சியில் உள்ளதாம். இதில் மேலும் சுவாரசியம் என்னவென்றால், கவுடியின் முதல் மூன்று மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாம். மற்றவர்கள் பள்ளியில் படித்துவருகிறார்களாம். ஒருசிலருக்கு இன்னும் பள்ளியில் சேர்க்கும் வயதே வரவில்லையாம்.