பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர்.! பைக் டாக்சியில் இருந்து குதித்த இளம்பெண்.! வைரலாகும் பதறவைக்கும் வீடியோ!!

பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர்.! பைக் டாக்சியில் இருந்து குதித்த இளம்பெண்.! வைரலாகும் பதறவைக்கும் வீடியோ!!


Girl fall down from Bike taxi video viral

பெங்களூரு யெலஹங்கா அருகே வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இரவு 11 மணியளவில் இந்திரா நகரில் வசித்து வரும் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் ஆன்லைனில் பைக் டாக்சி பதிவு செய்து அதில் சென்றுள்ளார்.  அப்பொழுது பைக் ட்ரைவர் ஓடிபி எண்ணை பரிசோதிக்க வேண்டும் என பெண்ணின் போனை வாங்கிகொண்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும் அவர் இந்திராநகருக்கு செல்லாமல் தொட்டபள்ளாப்புரா பகுதியில் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் பயந்து போன அந்த இளம் பெண் வேகமாக சென்ற பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த இளம்பெண் தற்போது இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 27 வயது நிறைந்த தீபக்ராவ் என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஓடும் பைக்கிலிருந்து இளம்பெண் கீழே குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.