சினிமா

தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியின் பெட்டியை திறந்து பார்த்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! அம்பலமான பல ரகசியங்கள்!!

Summary:

girl arrested for marry and cheating 4 mans

ஹைதராபாத்தில் வசித்து வருபவர் நரசிம்மா வேணுகோபால். இவர் தனது வயதான பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ளும் பெண் தேவை என திருமணதகவல் இணைய தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அவருக்கு அருணா என்ற நர்சிங் படித்த பெண் இணையதளத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் உங்களது பெற்றோர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறிய அவரை நம்பி நரசிம்மா திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் திருமணம் முடிந்து நரசிம்மாவுடன் நான்கு மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய அருணா, அவருடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டு அவர் போட்ட நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். மேலும் அவர் எப்போதாவது திரும்பி வருவார் என காத்திருந்த நரசிம்மா அருணா விட்டுச்சென்ற. பெட்டி ஒன்றை திறந்து பார்த்துள்ளார்.

Image result for marriage

அதில் அவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருணாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது அவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகான் என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டு 15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். பின்னர் வாரங்கலை சேர்ந்த ஹரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு 20 லட்சம் ஏமாற்றி இரண்டு மாதங்களில் சண்டை போட்டு பிரிந்தார்.  இதனை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த பவன் குமார் என்பவரை திருமணம் செய்து 50 லட்சம் ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது.

 

மேலும் திருமண தகவல் இணையதளத்தில் இரண்டாவது திருமணம் செய்ய நினைத்தவர்கள் வழுக்கைத் தலையுடன் காணப்படுபவர்கள் போன்ற நபர்களை குறிவைத்து அருணா தனது ஆசை பேச்சால் கவர்ந்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் ஐந்து வாலிபர்களுக்கு திருமண ஆசை காட்டி தூண்டில் போட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் போலீசில் சிக்கிக் கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement