காதலனுடன் உல்லாசம்.. கையும் களவுமாக பிடிபட்ட அக்கா.. அதிர்ச்சியில் தங்கையை கொலை செய்த கொடூர சம்பவம்...!



flirting-with-boyfriend-sister-caught-red-handed-tragic

உத்திர பிரதேச மாநிலம் பிலிப்பிட் மாவட்டத்தை சிறந்த சிறுமி ஒருவர் அவரது அக்கா மற்றும் அவருடைய காதலனால் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்நிலையில் கொலைகான சம்பவம் குறித்து விசாரிக்கையில் சிறுமியின் அக்கா அவரது காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை சிறுமி பார்த்ததனால் எங்கே பெற்றோரிடம் கூறிவிடுவாளோ என்ற அச்சத்தில் சிறிதும் இரக்கமின்றி தனது தங்கையை காதலன் உதவியுடன் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Crime

சம்பவத்தன்று சிறுமியின் தாய் தந்தை வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது அவர்களது இளைய மகள் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காத காரணத்தால் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர் தங்களது மூத்த மகளிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர் தங்கை நீண்ட நேரமாக உறங்கிக் கொண்டிருப்பதால் நான் எழுப்பவில்லை என்று கூறி சமாளித்துள்ளார். இதனை உண்மை என நம்பி பெற்றோர் அந்த சிறுமியை தகனம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அக்காவின் நடத்தையில் சந்தேகம் எழவே பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரிக்கையில் அக்கா தனது காதலனுடன் சேர்ந்து தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்