இந்தியா

3 வது மாடியில் திடீர் தீ விபத்து..!! தீயணைப்பு வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Summary:

டெல்லியில் 3 வது மாடியில் திடீர் தீ விபத்து..!! தீயணைப்பு வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

டெல்லி சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி  கட்டிடத்தில்  இன்று அதிகாலை பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு உடனே தகவல் அளித்தனர். பின்னர், தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், அதிவேகமாக விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்தனர்.

பிறகு, தீ விபத்து ஏற்பட்ட அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு உறங்கிக் கொண்டிருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த போலிசார்,இது குறித்து வழக்குப் பதிவு செய்து, இந்த தீ எப்படி பற்றியது...? தீ வைத்தது யார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தும், விசாரணை நடத்தியும் வருகின்றனர். உடல் கருகிய நிலையில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement