இந்தியா

அதிர்ச்சி சம்பவம்.! ரயில்வே அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.! தீயணைப்பு வீரர்கள், போலீசார் உட்பட9 பேர் பலி.!

Summary:

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் சாலையில் அமைந்துள்ள கிழக்கு ரயில்வே அலுவலக கட்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் சாலையில் அமைந்துள்ள கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.13 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துப் பகுதிக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Advertisement