மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! கொரோனா நோயாளி பலி.!

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! கொரோனா நோயாளி பலி.!


fire-accident-in-hospital-HCALAT

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது நிரம்பிய சந்தியா ராணி மொண்டோல் என்ற பெண் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும், விபத்து நடந்த வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று நோயாளிகள் பாதுகாப்பாக எந்த காயமும் இல்லாமல் மீட்கப்பட்டனர். 

இதனையடுத்து மருத்துவமனையில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. விசாரணையில், ஒரு படுக்கை மட்டும் எரிந்ததால் கொசுவர்த்தி சுருளால் தீ பரவியிருக்கலாம் என மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும், மருத்துவமனையின் துணை முதல்வர் கூறுகையில்,  அதிகாலை 5 மணியளவில் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. பொது வார்டில் நான்கு நோயாளிகள் இருந்தனர். மூன்று நோயாளிகளை நாங்கள் காப்பாற்றிய போதிலும், ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.