அரசியல் இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

Summary:

fire accident in hospital


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டு தளங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைக்கும் பணியில் தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்தில் யாருக்காவது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வழக்கம். மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement