பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியடைந்த தந்தை.! உச்சட்ட சந்தோஷத்தில் தந்தையின் நெகிழ்ச்சி செயல்.!

பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியடைந்த தந்தை.! உச்சட்ட சந்தோஷத்தில் தந்தையின் நெகிழ்ச்சி செயல்.!


father used helicopter for his new born daughter

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷெல்காவோன் என்ற பகுதியைச் சேர்ந்தவர், விஷால் ஜரேகர். இவரது மனைவிக்கு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பின் பிரசவத்திற்கு பிறகு, போசாரி என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விஷால் ஜரேகரின் மனைவி வசித்து வந்துள்ளார்.

விஷாலின் குடும்பத்தில் பல தலைமுறைகளா பெண் குழந்தைகள் ஏதும் இல்லையாம். எனவே, தனக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் தந்தை விஷால் உள்ளார். அந்த குழந்தைக்கு ராஜலக்ஷ்மி என பெயரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் தனது குடும்பத்தில் முதன்முறையாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, குழந்தையை போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு, 1 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, விஷால் ஜரேகர் அழைத்து வந்துள்ளார்.

பொதுவாக பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு பாரம் என்ற மனப்பான்மை நமது சமூகத்தில் நிலவிவரும் நிலையில், தந்தை ஒருவர் பெண் குழந்தை பிறந்ததை இப்படி தடபுடலாக கொண்டாடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.