மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய தந்தை.. மனைவி தற்கொலை செய்துகொண்டதால் நேர்ந்த சோகம்father-killed-3-kids-and-commit-suicide-near-bengaluru

மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கில் தொடங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் வசித்துவந்தவர் ஜனகராஜ் (34). இவருக்கு சரஸ்வதி (13), ஹேமதி (9) ஆகிய இரு மகள்களும், 3 வயதில் ராஜ்குமார் என்ற மகனும் இருந்தனர். நேபாளத்தை சேர்ந்த ஜனகராஜ் பெங்களூருவில் காவலாளியாக பணிபுரிந்துவந்துள்ளார்.

இந்நிலையியல் ஜனகராஜின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார். மனைவி உயிரிழந்ததில் இருந்து கடும் மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார் ஜனகராஜ். மேலும் தனி ஆளாக தனது குழந்தைகளை வளர்க்கவும், பாத்துக்கொள்ளவும் சிரமப்படுவந்துள்ளார்.

இந்நிலையில் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த அவர் தனது மூன்று குழந்தைகளையும் தூக்கில் மாட்டி தொங்கவிட்டு அவர்கள் இறந்த பிறகு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அடுத்து ஜனகராஜின் வீடு கதவு மறுநாள் நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது மூன்று குழந்தைகள் மற்றும் ஜனகராஜ் நால்வரும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நால்வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவன் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.