அப்பாவுக்கும் , மகனுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம்..! கையில் பேரக்குழந்தை வேறு.! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா லைப் ஸ்டைல்

அப்பாவுக்கும் , மகனுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம்..! கையில் பேரக்குழந்தை வேறு.!

ஒரே மேடையில் தந்தைக்கும், மகனுக்கும் திருமணம் நடந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. பொதுவாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் இருக்கும் கக்ரா என்ற கிராமத்தில் வசித்துவரும் பழங்குடி மக்களில் அதிகப்படியான தம்பதியினர் திருமணம் ஆகாமலே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கக்ரா கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷகோரி என்ற தம்பதியினர் சுமார் 30-வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்யமலே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு ஜித்தீஷ்வர் என்ற மகன் உள்ள நிலையில் அவரும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஜித்தீஷ் மற்றும் அருணா இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமலையே ஒன்றாக வாழந்து வருவதை அறிந்த நிம்மிட என்ற தொண்டு நிறுவனம் தங்கள் செலவில் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, அப்பா ராம்லால் மற்றும் அவரது மகன் ஜித்தீஷ்வர் ஆகியோருக்கு ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo