பேருந்தை ஓவர் டேக் செய்கையில் சோகம்.. முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் தலைநசுங்கி பலி.!

பேருந்தை ஓவர் டேக் செய்கையில் சோகம்.. முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் தலைநசுங்கி பலி.!


Ex police officer dead by bus accident in kerala

பேருந்தை முந்த முயன்ற ஓய்வு பெற்ற காவல் உதவிஆய்வாளர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் தொடுபுழாவின் குறுகலான சாலையில், பேருந்து ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து புறப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் காவல் உதவிஆய்வாளர் சந்திரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பேருந்தை முந்துவதற்கு முயன்றுள்ளார்.

இதில் பேருந்து இடித்துச்சென்றதால் அவர் கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின்புற சக்கரங்கள் அவரது தலையின் மீது ஏறி இறங்கியுள்ளன. இந்த விபத்தில் ஹெல்மட் நொறுங்கி சந்திரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். KERALAபின் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தொடுபுழா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.