இந்தியா

கொரோனா நெருக்கடியை சமாளிக்க பி.எஃப்-ல் புதிய மாற்றம்! மத்திய அரசு!

Summary:

Epf changes

சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலால் பலர் தங்கள் வேலைகளை இழந்துள்னனர். இதனை சமாளிக்க, மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் EPFO விதிகளில் மாற்றம் ஏற்பட்டதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்போது 75% வரை ஈபிஎஃப் கணக்கிலிருந்து திரும்பப் பெறலாம். கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஈபிஎஃப் கணக்கில் 75 சதவீத தொகையை அல்லது மூன்று மாத சம்பளத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படும். அதேபோல் ஈபிஎஃப் கணக்கிலிருந்து திரும்பப் பெறுவது திருப்பிச் செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement