பள்ளத்தில் விழுந்த யானை ஜேசிபி எந்திரம் மூலம் மீட்பு! மேலே வந்ததும் அது கொடுத்த செம ஷாக்! வைரலாகும் வீடியோ!

பள்ளத்தில் விழுந்த யானை ஜேசிபி எந்திரம் மூலம் மீட்பு! மேலே வந்ததும் அது கொடுத்த செம ஷாக்! வைரலாகும் வீடியோ!


elephant rescued using JCP video viral

கர்நாடக மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்த யானை ஒன்றை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் யானை ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக அந்த யானை அங்கிருந்த பள்ளம் ஒன்றில் விழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த யானை மேலே வர  எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து வனத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஜேசிபி இயந்திரத்துடன் விரைந்த அவர்கள் பள்ளத்திலிருந்து மிகவும் பாதுகாப்பாக யானையை மேலே மீட்டு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் வெளியே வந்த யானை திடீரென ஜேசிபி இயந்திரத்தை முட்டி தாக்குவதை போல் சென்றுள்ளது. பின்னர் கண்ணீர் வெடிகுண்டுகள் வீசி வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இந்த வீடியோ இணையத்தில்  வைரலான நிலையில் அதனைக் கண்ட நெட்டிசன்கள் யானை தன்னை காப்பாற்றிய ஜேசிபி எந்திரத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.