மது போதையில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை!



Drunken father killed son in Karnataka

பெங்களூர் அருகே மது போதையில் தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியை சேர்ந்தவர் நர்தன் போபண்ணா. இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தந்தை சுரேஷ் மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

karnataka

இதில் தந்தை சுரேஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தாய்க்கு உடம்பு சரியில்லாததால் படுக்க படுக்கையாக இருந்துள்ளார். இதனிடையே மகனிடம் குடிக்க பணம் கேட்டு சுரேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

எந்த நிலையில் நேற்று வழக்கம்போல் தனது மகனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மகன் தனது தந்தை சுரேஷ் குமாரை ஒரு அருகில் தள்ளி போட்டியுள்ளார். பூட்டிய அறைக்கு வெளியே நர்தன் போபண்ணா அமர்ந்திருந்தார்.

அப்போது சுரேஷ் கதவின் பூட்டை உடைக்க கதவின் பின்புறத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு மகனின் உடலில் பாய்ந்தது. இதனால் ரத்தம் வடிந்த நிலையில் நர்தன் போபண்ணா மயங்கி கீழே விழுந்தார்.

karnataka

இதனையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த சகோதரி அண்ணனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நர்தன் போபண்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நர்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் இருந்த சுரேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.