இந்தியா

மதுவுக்கு அடிமையான குரங்கு! சரக்கு கிடைக்காததால் ஏற்பட்ட வெறி! சிறைவாசம் அனுபவிக்கும் குரங்கு!

Summary:

drunk addict monkey arresterd

உத்திரப்பிரதேசத்தில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான குரங்கு ஒன்றுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது. குரங்கு சேட்டை என அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த குரங்கின் சேட்டை ஒரு படி மேலே உள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் மிர்ஸாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த குரங்கை வளர்த்து வந்துள்ளார். அவர் தினமும் இந்த குரங்குக்கு மதுபானம் கொடுத்து பழக்கியுள்ளார். அந்த குரங்கிற்கு கலுவா என்ற பெயரும் வைத்துள்ளார்.

மதுவுக்கு அடிமையான குரங்கு இதுவரை 250 பேருக்கும் மேலே கண்டித்துள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். திடீரென குரங்கை வளர்த்து வந்தவர் மரணம் அடைந்ததால், குரங்குக்கு மதுபானம் கிடைக்காமல் மது வெறி கொண்டு, அப்பகுதியில் செல்பவர்களை எல்லாம் குரங்கு கடிக்க தொடங்கியது.

இந்த மோசமான நிலையில், வனத்துறையினர் விரைந்து வந்து கலுவாவைப் பிடித்தனர். கான்பூர் உயிரியல் பூங்காவில் குரங்கு அடைக்கப்பட்டது.முதலில் அதனை தனியாக ஒரு அறையில் வைத்துப் பராமரித்துள்ளனர் வனத்துறையினர். ஆனாலும் அந்த குரங்கின் நடவடிக்கை மாறாததால், இனி வாழ்நாள் முழுக்க அதனை தனிக் கூண்டிலேயே அடைத்து வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.


Advertisement