இந்தியா Covid-19

கொரோனா பாதித்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்! கொரோனா வார்டில் நடந்த கொடூரம்!

Summary:

doctor misbehave to young girl in corona ward

நொய்டாவில் கடந்த 21 ஆம் தேதி 20 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதே மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அந்த மருத்துவமனையில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் தனி தனி வார்டுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார்கள். 

இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர், பெண்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்த அறைக்கு நுழைந்து கொரோனா பாதிக்கப்பட்ட  20 வயது இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த, இளம்பெண் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து சக நோயாளிகள் அந்த இளம்பெண்ணை  காப்பாற்றியுள்ளனர்.

இதனையடுத்து அந்த அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா சமயத்திலும் ஒரு மருத்துவம் படித்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement