
மத்திய பிரதேச மாநிலத்தில், திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியை மருத்துவர் கொலை செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், சத்னா பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் திரிபாதி. இவரது கிளினிக்கில் விபா என்ற 24 வயது பெண் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் விபா தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் விபாவை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லாத மருத்துவர் திரிபாதி, இரண்டுமாதங்களுக்கு முன்பு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் காதலியின் சடலத்தை புதைத்துள்ளார். இதனையடுத்து விபாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் திரிபாதியிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் திரிபாதியை கைது செய்து மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement