தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இந்த வயசுல இப்படி ஒரு முடிவா?? அப்படி என்னதான் நடந்துச்சு? ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்தவர்..!
பெண் மருத்துவர் ஒருவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 24 வயது மருத்துவர் அக்னாசா மகேஸ்வரி. மருத்துவம் பயின்றுவந்த இவர் தனக்குத்தானே மயக்க ஊசியை போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த புதன்கிழமை மாலை விடுதி அறையில் அந்தப் பெண் இறந்து கிடந்தார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அறையில் இருந்து வெற்று ஊசிகள் மற்றும் வெற்று மருந்து பாட்டில்களை மீட்டுள்ளனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், 2.5 மில்லி வீதம் சுமார் 4 டோஸ் அளவு ஊசியை போட்டுகொண்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட அந்த பெண்ணின் அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில் "மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாகவும், தன் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்".