டெல்லியில் அதிர்ச்சி... பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி தலைமறைவு.!!



delhi-police-filed-case-against-swami-chaitanyananda-fo

டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த கல்வி நிறுவனத்தின் மைய இயக்குனர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி இருக்கும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டெல்லியில் பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் மைய இயக்குனராக சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி இருந்து வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இயக்குனர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது 17 மாணவிகள் புகாரளித்தனர். இதற்கு முன்பும் அவர் மீது 5 மாணவிகள் புகாரளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

India

தற்போது மாணவிகள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவோம் என்பதையறிந்த சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி தலைமறைவாகி இருக்கிறார். அவரை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரியின் மைய இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.!! கல்லூரி மாணவி மீது பலாத்க்கார முயற்சி.!! நிர்வாக அதிகாரி தலைமறைவு.!!

இதையும் படிங்க: அட கொடுமையே... 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! சமஸ்கிருத ஆசிரியர் தலைமறைவு.!!