விளம்பரத்திற்கு ரூ.1100 கோடி செலவு, மக்கள் திட்டத்திற்கு பணம் இல்லையா?; டெல்லி அரசை சரமாரியாக கண்டித்த நீதிமன்றம்.!

விளம்பரத்திற்கு ரூ.1100 கோடி செலவு, மக்கள் திட்டத்திற்கு பணம் இல்லையா?; டெல்லி அரசை சரமாரியாக கண்டித்த நீதிமன்றம்.!


Delhi High Court Condemn Delhi Govt 

 

டெல்லியில் இருந்து மீரட், காசியாபாத் நகர்களை இணைக்கும் வகையில் விரைவு இரயில் திட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மாநில அரசிடம் கேட்கையில், படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த கருத்தை மேற்கோளிட்டு அதிரடி காண்பித்துள்ளார். 

அதாவது, டெல்லி மாநில அரசு விளம்பரத்திற்காக 3 ஆண்டுகளில் ரூ.1100 கோடி அளவில் செலவு செய்துள்ளது. இதனை மேற்கோளிட்டு பேசிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவுர், சுதன்ஷு துளியா, 

delhi

"மாநில அரசிடம் விளம்பர பணிகளில் ஈடுபட நிதி இருக்கும் பட்சத்தில், மக்களின் தேவைக்காகவும், விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணமும் இருக்கும். 

அந்த திட்டத்திற்கு தேவையான ரூ.415 கோடி பணத்தை 2 மாதத்திற்குள் அரசு விடுவித்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பண விடுவிக்கப்பட்ட தகவல் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.