ப.சிதம்பரத்திற்கு மீண்டும் ஒரு சறுக்கல்! ஜாமின் மனுவை நிராகரித்தது டெல்லி கோர்ட்!

ப.சிதம்பரத்திற்கு மீண்டும் ஒரு சறுக்கல்! ஜாமின் மனுவை நிராகரித்தது டெல்லி கோர்ட்!



delhi-court-rejects-pchidhambaram-bail

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

chidamparam

ஆனால் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கடந்த 16-ஆம் தேதி கைது செய்திருந்தது. ஆகையால், அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.