இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது!! காத்திருந்த சந்தோஷம் கிடைக்காமலையே உயிரிழந்த குடும்பம்!!

இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது!! காத்திருந்த சந்தோஷம் கிடைக்காமலையே உயிரிழந்த குடும்பம்!!


Delhi college professor and her husband dead for corona

கொரோனா தொற்றினால் கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் பெரும் பாதிப்புகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த பவன் குமார் என்ற நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு டெல்லியில் எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் உறவினர்கள் உதவியுடன் பவன் குமாரின் மனைவி ஜசல் அவரை சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு பவன் குமாருக்கு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனிடையே அவரது மனைவி ஜசலுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பவன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த தகவலை அவரது மனைவியிடம் உறவினர்கள் தெரிவிக்கவில்லை. இப்படியே 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது ஜசலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவன் இறந்த தகவல் தெரியாமலையே அவரது மனைவியும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜசல் டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர். இவருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க இருந்ததாகவும், அது தெரியாமலையே ஜசல் உயிரிழந்துவிட்டார் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.