
Summary:
delhi cm meet modi
டெல்லியில் நாடாளுமன்ற வாளாகத்தில் பிரதமர் மோடியை டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்.
டெல்லி வன்முறைக்கு பிறகு தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. டெல்லி முதல்வராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட கெஜ்ரிவால் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி வடகிழக்குப் பகுதியில் இந்திய குடியுரிமைச்சட்ட ஆதரவாளர்களுக்கும்,எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்தநிலையில், வன்முறை ஏற்பட்ட வடகிழக்கு பகுதிகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் பிரதமர் மோடியை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார்.
Advertisement
Advertisement