இந்தியா

இறந்தவரை அடக்கம் செய்தபின் காத்திருந்த பேரதிர்ச்சி..! ஒரு கிராமமே பெரும் பீதியில் உள்ள அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Dead man had corona villagers feared

இறந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் கிராமம் தர்மபுரி நகரை  சேர்ந்தவர் கந்தசாமி. ஓட்டுநராக பணிபுரிந்துவந்த இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 19 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்துவிட்டார்.

இறந்துபோன கந்தசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு வருவதற்கு முன்பே இறந்தவரின் உறவினர்கள் அரசியல் பிரமுகர் ஒருவரின் சிபாரிசுடன் உடலை பெற்றுக்கொண்டு கடந்த 20ம் தேதி அடக்கம் செய்துவிட்டனர். இறுதி ஊர்வலத்திலும் அந்தப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனனர்.

இந்நிலையில் இறந்துபோன கந்தசாமியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானநிலையில், அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அப்பகுதி கிராம மக்கள் கொரோனா அச்சத்தில் உள்ளனர்.

மேலும், கந்தசாமியின் குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதாக அந்த கிராம மக்கள் அனைவரும் கடும் பீதி அடைந்துள்ளனர்.


Advertisement