சத்துணவில் அழுகிய முட்டை.. வாந்தி, மயக்கத்தால் 29 மாணவர்கள் பாதிப்பு.. சிதம்பரம் அருகே சோகம்.!

சத்துணவில் அழுகிய முட்டை.. வாந்தி, மயக்கத்தால் 29 மாணவர்கள் பாதிப்பு.. சிதம்பரம் அருகே சோகம்.!


Cuddalore Chidambaram Near Village School 29 Students Affected Food Poison issue

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், அத்தியாநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவியர்களுக்கு தினமும் சத்துணவு, முட்டை வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றும் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்ட நிலையில், உணவை சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கம் அடைத்தனர். இவ்வாறாக 29 மாணவர்கள் பாதிக்கப்படவே, அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் ஊர் மக்கள் உதவியுடன் அனைவரையும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Cuddalore

அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவர்களிடமும் விசாரணை நடந்தது. 

அப்போது, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது உறுதியாகவே, அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.