
cpi officers - arun jaitley
சந்தேகத்துக்கு இடம் கொடுக்காதவர்கள் மட்டுமே சிபிஐயில் பணிபுரிய வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தான இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அலோக் வர்மா ஆலோசனையின் படி, ராகேஷ் அஸ்தான மீது பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டு எழுந்து அஸ்தானா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
இந்தநிலையில் இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலோக் வர்மா மீது மத்திய புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ் பொறுப்பு வகிக்கும் காலங்களில் எந்த கொள்கை முடிவு எடுக்க வேண்டாம் என்றும் அலுவலக பணிகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகளின் நடத்தைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிபிஐ மீதான நம்பகத்தன்மையை பேணும் நோக்கத்திலேயே மத்திய அரசு செயல்பட்டிருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தலைமையில் சிபிஐ இயங்குவது சரியில்லை என்பதால் தலைமையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து, “சிபிஐ சீசரின் மனைவியை போன்றது” என்ற அமைச்சர் ஜெட்லி, “சந்தேகத்துக்கு இடம்கொடுக்காதவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டிய இடம் அது. அதில் யார் குறித்து சந்தேகம் என்று வந்தாலும் அது சிபிஐ மீதான நம்பகத்தன்மையை குலைக்கும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement