மேக்கப் போடுவது.. மனரீதியான பாதிப்பா.?! அடக்கொடுமையே.. வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்.! 



Court Rejects Divorce Plea Over Wife Wearing Lipstick at Night

நள்ளிரவு 2 மணி அளவில் தனது மனைவி லிப்ஸ்டிக் மற்றும் காஜல் பயன்படுத்துவதாகவும், அதனால் அவருக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

மனுவை விசாரித்த நீதிமன்றம், நள்ளிரவில் லிப்ஸ்டிக் அல்லது காஜல் பயன்படுத்துவது மட்டும் ஒருவரின் மனநலத்தை கேள்விக்குறியாக்கும் செயல் அல்ல என்று தெளிவாகக் கூறியது. இதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

make up

மேலும், புதுமணப் பெண் தனது விருப்பப்படி அலங்காரம் செய்து கொள்வது இயல்பான ஒன்றே தவிர, அதை மனநலக் கோளாறாக கருத முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதுபோன்ற செயல்களை அடிப்படையாகக் கொண்டு திருமண உறவை முறிக்கும் வகையில் முடிவு எடுக்க முடியாது என்றும் கூறியது.

இதையும் படிங்க: பணக்காரரை மட்டும் பார்த்து திருமணம் செய்யாதீங்க.... CEO வெளியிட்ட எமோஷனல் பதவி!!!

இதையடுத்து, கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சற்று முன்.. செந்தில் பாலாஜி வெற்றி செல்லும்! அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்..! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.!!!