மெட்ரோ ரயிலில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி! அதை பார்த்த மர்ம நபர் செய்த அதிர்ச்சி காரியம்!
பொது இடம் என்றுகூட பார்க்காமல் காதல் ஜோடிகள் அத்து மீறி நடந்துகொள்வதை நாம் எத்தனையோ முறை பார்த்திருப்போம். அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது. டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த காதல் ஜோடி அங்கிருந்த தனிமையை பயன்படுத்திக்கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த காட்சிகள் ரயிலில் இருந்த CCTV கேமிரா மூலம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் CCTV காட்சியை பார்த்த மெட்ரோ நிர்வாக ஊழியர் யாரோ ஒருவர் அந்த காட்சிகளை தொலைபேசியில் பதிவு செய்து அதனை ஆபாச இணைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
வீடியோ பதிவான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அந்த விடியோவை பாரத்தை அடுத்து அந்த காதல் ஜோடிக்கு இதுகுறித்து தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஜோடி மெட்ரோ நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த ஜோடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்னனர்.
மெட்ரோ நிறுவன ஊழியர் செய்தது தவறு என்றாலும் பொது இடத்தில் இப்படி ஆபாசமாக நடந்துகொண்தற்காக அந்த ஜோடி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் விடியோவை பதிவு செய்தது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.